அஷேசம் ஆனந்த விநாயகர் கோவில் உண்டியலை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்

மன்னார்குடி கோவிலில் உண்டியல் மாயம்;

Update: 2025-09-03 07:55 GMT
மன்னார்குடி அருகே அஷேசம் கிராமத்தில் ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று செவ்வாய் கிழமையை ஒட்டி கோவில் பூசாரி பூஜைகள் செய்துவிட்டு மாலை கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார் இந்நிலையில் இன்று காலை மீண்டும் பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சடைந்தார் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து உண்டியல் காணாமல் போனது தெரிய வந்தது இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் கோவிலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேடியும் உண்டியல் கிடைக்கவில்லை. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது திருட்டு சம்பவம் குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News