ராமநாதபுரம் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் சுந்தரமுடையான் பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் சுந்தரமுடையான் பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் சாத்தகோன்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுந்தரமுடையான் பல்நோக்கு பாதுகாப்பு பேரிடர் கட்டிடத்தில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலருக்கான பயிற்சி முகாம் சாத்தக்கோன் வலசை கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது . இம் முகாமில் புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் பேரிடரில் இருந்து பாதுகாப்பதற்கான பயிற்சி முகாம் பற்றி முகாமில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் புயல் வெள்ள காலங்களில் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது பஞ்சாயத்து அலுவலரிடம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது இந்நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை ஆணையரகம் சேப்பாக்கம் இளநிலை வருவாய் ஆய்வாளர் சந்துரு , சாத்தக்கோன் வலசை ஊராட்சி செயலர் விஸ்வநாதன் ,தலையாரி நதியா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.