உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை துவக்கி வைத்த அமைச்சர்;
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகராட்சியிலுள்ள 6,7 மற்றும் 8 ஆகிய வார்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி சமுதாய திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இம்முகாமினை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நகரமன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன்,மறைமலைநகர் தெற்கு நகர செயலாளர் த. வினோத்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், முதியோருக்கு மருத்துவப் பெட்டகம், வீட்டு வரி பெயர் மாற்றம் ஆணை உள்ளிட்டவைகளை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் ஹெலன் மாலதி,வட்டாட்சியர் ஆறுமுகம்,சிறப்பு வட்டாட்சியர் தனலட்சுமி,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ,துணை அமைப்பாளர்கள்,நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.