வெள்ளக்கோவில் அருகே கார் மோதி முதியவர் பலி
வெள்ளகோவில் அருகே கார் மோதி முதியவர் பலி காவல்துறை விசாரணை;
வெள்ளகோவில்- முத்தூர் சாலை மேட்டுப்பாளையம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று மாந்தபுரம் நாட்டராயசாமி கோவிலுக்கு செல்வதற்காக, அய்யம் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார். அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்தார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.