போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்;
. குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் வாரச்சந்தை பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்றுமுன்தினம் 06:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், போலி லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கோபால், 33, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். --