சாலையின் ஓரமாக நின்றவர் மீது கார் மோதி விபத்து

குமாரபாளையத்தில் சாலையின் ஓரமாக நின்றவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார்.;

Update: 2025-09-03 14:06 GMT
குமாரபாளையம் ஆலங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் சுரேஷ், 33. செண்டரிங் வேலை. இவர் நேற்றுமுன்தினம் மதியம் 12:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, பெட்ரோல் பங்க் எதிரில், நாதன் பேக்கரி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தார். . அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கோடா கார் இவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் , திருப்பூர் மாவட்டம், மைலாடி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் செந்தில்வேல், 39, என்பவரை கைது செய்தனர்.

Similar News