மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்!
போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை காவல் துறை உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் இன்று (செப்டம்பர்-03) மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை காவல் துறை உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் தாசில்தாரிடம் அனுமதி பெற்று காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு வேன் மூலம் அனுப்பி வைத்தனர்.