அரக்கோணம் அருகே ரேஷன் கடையில் ஆட்சியர் ஆய்வு
ரேஷன் கடையில் ஆட்சியர் ஆய்வு;
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள மின்னல் ஊராட்சி நியாய விலை கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்களுக்கு தரமான மற்றும் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.