வாலாஜா அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இருந்து அனந்தலை கிராமம் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலத்தில் நிலைமை மேலும் மோசமடைந்து விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் சாலை விரைவில் சீரமைக்க அரசு மற்றும் சாலை துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.