கூலித்தொழிலாளிக்கு கோடியில் வந்த மின் கட்டணம்
கோடியில் வந்த மின் கட்டணம்;
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி உபமின் நிலையத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியில் கூலித்தொழிலாளி மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது வீட்டிற்கு இந்த மாதம் ரூ.1,61,31,281 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அவர் மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மின்வாரியம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது இன்று சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.