திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.