கல்லூரியில் நடைபெறும் அவலம்-மாநில துணை பொதுச்செயலாளர் பேட்டி
ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் கலைக்கண்ணன்;
ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் கலைக்கண்ணன் இன்று (செப்டம்பர் 4) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் பட்டியல் சமூக மாணவர்களுக்கு பல்வேறு பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை நடைபெறுகின்றது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் பொழுது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.