வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா!

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (செப்டம்பர்-4) நடந்தது.;

Update: 2025-09-04 15:17 GMT
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (செப்டம்பர்-4) நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், மகாபூர்ணாஹூதி நடந்தது. இதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News