மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கு நேர்காணல்!
மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டத்தில் 75 சதவீதம் மாற்றுத்திறன் உள்ளவர்களை பராமரிப்பவர்களுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர்கள் 5 பேர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அவர்களை பராமரிக்கும் தகுதியான நபர்களுக்கு வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என தெரிவித்தனர்.