ஜெயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்சனையில் கூட்டுறவு சொசைட்டி பெண் கணக்காளர் தீக்குளித்து தற்கொலை. கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.
ஜெயங்கொண்டம் அருகே குடும்ப பிரச்சனை இது போன்ற ஒரு சொசைட்டி பெண் கணக்காளத்தை குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
அரியலூர், செப்.4. - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கீழத் தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி தேன்மொழி (42)இவர் கூட்டுறவு சொசைட்டியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.இவர்களுக்கு 9 வயதில் வருணிகா, 4 வயதில் அனுஷ்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தேன்மொழிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவர் சமாதானம் செய்த நிலையில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட தேன்மொழி வீட்டின் கதவை உந்தாப்பால் போட்டுக்கொண்டு திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று காப்பாற்ற முயற்சித்த போது தேன்மொழி பாத்ரூமிர்க்குள் ஓடியுள்ளார். காப்பாற்ற முயற்சிப்போம் பயனில்லாமல் தேன்மொழி உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடல் கூறு ஆய்வு முடிந்து அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதில் தேன்மொழியின் பெற்றோர்கள் அவரது மகள் தேன்மொழி சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.