ஜெயங்கொண்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டியூஷன் உரிமையாளர் பலி
ஜெயங்கொண்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டியூஷன் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
அரியலூர், செப்.4. - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் ஐந்தாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சையத் அலி (42) இவர் தனியார் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்.இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதி செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.அப்போது எதிரே பாப்பாங்குளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (45)என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சையத்அலி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சையத்அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சையத் அலியின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.