இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் அகில இந்திய வ.உ.சி.பேரவை சார்பில் மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில் ஏராளமானோர் அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், பேரவை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.