அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.;

Update: 2025-09-05 08:44 GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் சரவனாதேவி தலைமையில் நடந்தது. பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் கார்த்திகேயனி வரவேற்றார். நாமக்கல் மாவட்ட மனநலத் திட்ட உளவியலாளர் அர்ச்சனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களிடையே பாலின விழிப்புணர்வு, பாலினம் தொடர்பான பிரச்சனைகள், பாலின சமத்துவம் போன்ற கருத்துக்கள் பற்றி புரிதலையும், விழிப்புணர்வையும் மேலும் மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும், மாணவர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் அதன் எதிர்மறையான விளைவுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும், மாணவர்கள் சமுகவலைத்தளங்களில் செலவிடும் நேரங்களை குறைத்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுப்பினர் மற்றும் ஆங்கில துறைத்தலைவர் பத்மாவதி நன்றி கூறினார்.

Similar News