நியாய விலை கடையை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை, நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்;

Update: 2025-09-05 08:50 GMT
குமாரபாளையம் நகராட்சி வார்டு எண் 9 திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கம்பன் நகர் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக் கடையிலிருந்து திருவள்ளுவர் நகர் பகுதி குடும்ப அட்டையை தனியாக பிரித்து, திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை, நகர மன்ற தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்

Similar News