டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்
டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்;
திருப்பத்தூர் மாவட்டம் காளி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க சிறப்பு தலைவர் இரணியப்பன் எச்சரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே உள்ள தனியார் திருமண வளாகத்தில் தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினர். அப்போது பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் இரனியப்பன் கூறும் போது... தமிழக அரசு நவம்பர் மாத இறுதிக்குள் டாஸ்மார்க் ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்து மீண்டும் அந்த காலி பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என்கிற ஆணையை வெளியிட்டுள்ளது. நீதிமன்றமும் நவம்பர் இறுதிக்குள் இந்த நடவடிக்கையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் ஊழியர்கள் வேலை பளு காரணமாக பல்வேறு பிரச்சனைகளில் உள்ளனர் சிறிய கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்று வைக்க இட பற்றாக்குறை உள்ளது. எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் மேலும் அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்கி டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் நவம்பர் மாதத்தில் சென்னை எழும்பூரில் உள்ள மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.