நூறுநாள் வேலைத்திட்டத்தை முடக்குவதைக் கண்டித்து பூதலூரில் விதொச ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
ஊரக வேலை உறுதிச் சட்ட விதிகளின் படி வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாட்களை 200 ஆகவும் உயர்த்த வேண்டும். ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஊரக வேலை திட்டத்தை சிதைப்பதை கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதொச ஒன்றியச் செயலாளர் எஸ்.வியாகுலதாஸ் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் எம்.காமராஜ், கே.ராஜகோபால், பி.கோவிந்தராஜ், பி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விதொச மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், நிர்வாகிகள் கே.பழனிச்சாமி, பி.சித்திரவேல், என்.அருள், என்.வசந்தா, ஜி.கண்ணன், எஸ்.ராமலிங்கம், கே.தமிழரசன், எல்.ராஜாங்கம், எம்.ராமலிங்கம், வெங்கடேஸ்வரி, எம்.காமராஜ், சோலை.தெட்சிணாமூர்த்தி, ராமஜெயம், தர்மராஜ், மணிகண்டன், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.