தஞ்சை இ.பி காலனி சகாயம் நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 64). இவர் புதன்கிழமை இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது உறவினர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளன. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்த நகை மற்றும் பணம் இருக்கிறதா என பார்த்தபோது, அதில் இருந்த 2 பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.