கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட எம்.பி!
காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் வேலூர் எம்.பி D.M.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது பகுதி திமுக செயலாளர்கள் எம்.சுனில் குமார், ஜி வன்னியராஜா மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, மாமன்ற உறுப்பினர் சீனிவாசன், வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.