மாவட்ட அளவிலான தடகள போட்டியினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் நடத்தும் நான்காம் ஆண்டு தடகள போட்டியானது திருச்செங்கோடு KSR கல்வி நிறுவனத்தில் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய AKP.சின்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-09-06 05:02 GMT
இந்த போட்டியானது 14,16,18 மற்றும் 20 வயது என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி. . சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, போட்டியினை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி. பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வில் KSR கல்வி நிறுவனத்தின் தலைவரும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.மேலும் தடகள சங்கத்தின் பொருளாளர் KKP.சதிஸ் அவர்களும் கல்லூரியின் அட்மின் மோகன் மற்றும் குழந்தைவேல் அவர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியினை மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் முனைவர்.வெங்கடாசலபதி சிறப்பாக ஏற்பாடு செய்தார்.

Similar News