செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் சாலை மறியல்
செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் சந்தேகம் - வரதட்சணை கொடுமை காரணமாக கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு - காவல் நிலையம் முன்பு கொட்டும் மழையில் சாலை மறியல்;
திண்டுக்கல், செம்பட்டி, பாளையங்கோட்டை அருகே திம்மிராயபுரம் விருமாண்டி (எ) விவேக் மனைவி நிஷாலினி(23) தோட்டத்தில் தண்ணீர் தேக்கி வைத்திருந்த தொட்டியில் விழுந்து இறந்ததாக நிசாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிசாலினியின் பெற்றோர்கள் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஏற்கனவே திருமணத்தின்போது 27 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளதாகவும் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம்? என்று கூறி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் செம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையம் முன்பு கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.