நரிக்கட்டியூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
நரிக்கட்டியூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.;
நரிக்கட்டியூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் செல்லாண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி வயது 42. இவர் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் திருச்சி - கரூர் சாலையில் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் நரிக்கட்டியூர் பிரிவு அருகே சென்றபோது எதிர் திசையில் கரூர் தெற்கு காந்தி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் தங்கமணி டூ வீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தங்கமணியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக தங்கமணி அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.