ராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரம் தனியார் மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தை வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் பாக்கியநாதன் தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் மரகதவேல், மாவட்ட தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4லட்சம் விவசாய குடும்பங்கள், 2 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்துவருகின்றனர் இங்கு ஹைட்ரோகார்பன் திட்ட கிணறுகள் அமைத்தால் இவையனைத்தும் பாதிக்கப்படும்.எனவே சுற்றுச்சூழல் தாக்க ஆணையம் அனுமதியை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டம் ஆண்டுக்கு 1.72 மெட்ரிக் டன் முல்போகமாக மட்டுமே வானம்பாத்த பூமியாக உள்ளது. மொத்தம் 40000 டன் நெல் உற்பத்தியாகி வருகிறது. எனவே தமிழ் நாடு மூன்றாமிடம் பெற்றுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.72மெட்ரிக்டன் முதல்போகம் மட்டுமே விளைந்து வருகிறது. 4 லட்சம் விவசாய குடும்பங்களின் பாதிப்பை தடுக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் இத்திட்டம் கைவிடவேண்டும் என்றும் ராமநாதபுரத்தில் 20இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் புகை மண்டிய கணிமங்களை தோண்டி எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டுயும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இக்கூட்டத்தில் தேமுதிக, பாஜக, பாமக, விசிக அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.