பண மோசடி செய்த மன்னார்குடியை சேர்ந்த நபர் கைது
பண மோசடி செய்து விட்டு வெளிநாடு சென்ற நபரை போலீசார் பெங்களூருவில் கைது செய்தார்;
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது மன்னார்குடி மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் நவீன் (வயது 23) டிப்ளமோ படித்துள்ளார் இவரது உறவினர் சரவணன் (வயது 43).நவீன் சிங்கப்பூர் செல்வதற்காக சரவணன் தனது தெரிந்த குப்பாச்சி கோட்டையை சேர்ந்த சித்தி விநாயகம் (வயது 44)என்பவர் மூலம் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.இதனை அடுத்து நவீன் ரூ 3 1/2 லட்சத்தை சரவணனிடம் கொடுத்துள்ளார்.சரவணன் அந்த பணத்தை குப்பாச்சி கோட்டை சித்தி விநாயகத்திடம் கொடுத்துள்ளார்.ஆனால் சித்தி விநாயகம் கூறியபடி நவீனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கவில்லை.இது குறித்து சரவணன் பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 2023 - ம் ஆண்டு சித்தி விநாயகம் மீது புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பரவாக்கோட்டை போலீசார் சித்தி விநாயகத்தை தேடி வந்தனர் சித்தி விநாயகம் சிங்கப்பூர் சென்றுவிட்டது தெரியவந்ததை அடுத்து சித்தி விநாயகம் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த புதன்கிழமை சித்தி விநாயகம் சிங்கப்பூரிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்துள்ளார். விமான நிலைய அதிகாரிகள் சித்தி விநாயகத்தின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது பரவாக்கோட்டை போலீசார் தேடி வருவது தெரியவந்தது இதனை அடுத்து சித்தி விநாயகத்தை பெங்களூர் விமான நிலைய போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.பெங்களூர் விமான நிலைய போலீசார் பரவக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பரவாக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையில் போலீசார் பெங்களூர் சென்று சித்தி விநாயகத்தை கைது செய்து அழைத்து வந்தனர் பின்னர் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.