மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் திருப்பணி குறித்த ஆலோசனை கூட்டம்
ராஜகோபால சுவாமி கோவில் திருப்பணிக்கு பல்வேறு அமைப்பினரும் நன்கொடை வழங்கினர்;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும் இந்த கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்ற வருகிறது இந்நிலையில் கோபுரங்கள் மண்டபங்கள் தேர் பல்வேறு சுவாமி சன்னிதிகளில் மேற்கொண்டு திருப்பணிகளை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மன்னார்குடியின் பல்வேறு முக்கிய சங்கங்களை சேர்ந்தோர் தனி நபர்கள் திருப்பணிகள் நடத்தி முடிக்க தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் செயல் அலுவலர் மாதவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்