நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் முகாமை ஆட்சியர் ஆய்வு!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் முகாமை ஆட்சியர் ஆய்வு!;
திருப்பத்தூர் மாவட்டம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் முகாமை ஆட்சியர் ஆய்வு! திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கந்திலி ஒன்றியம், கண்ணாலப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வழங்கினார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், இணை இயக்குனர் மருத்துவம் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலர் வினோத்குமார், உதவி இயக்குநர் முருகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மோகன்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்