அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டதுடன், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
குமாரபாளையத்தில் அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு முன்பாக அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேலம் சாலை குப்புசாமி கேண்டீன் அருகே உள்ள பார் அருகே விற்பதாக தகவல் அறிந்து, நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகர் உள்ளிட்ட போலீசார், அங்கு மது விற்றுக்கொண்டிருத்த டீ மாஸ்டர் வேணுகோபால், 52, பார் ஊழியர் அருண்குமார், 42, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். வேணுகோபால் மீது ஏற்கனவே மது விற்ற வகையில், 3 வழக்குகளும், அருண்குமார் மீது ஏற்கனவே நான்கு வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.