காவலர் தின சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.
பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் காவலர் தின சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.;
பரமத்திவேலூர்,செப்.6: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் தமிழ்நாடு காவல் தினத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணி ப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசாருக்கான இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்திர வின்படி செப்டம்பர் 6-ந் தேதி காவலர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் பரமத்தி வேலூரில் உள்ள ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டரில் போலீசாருக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம் முகாமிற்கு ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இந்திராணி முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் பரமத்தி வேலூர், பரமத்தி, ஜேடர்பா ளையம், நல்லூர், வேலகவுண்டம்பட்டி, பரமத்திவேலூர்,போக்குவரத்து போலீசார், பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு,ரத்த அழுத்த அளவு, இருதய பரிசோதனை, நரம்பு மற்றும் எழும்பு குறித்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. வரும் காலங்களில் காவல் துறையினர் மட்டும் அல்லாமல் வருவாய்துறையினர் உள்ளிட்ட மக்கள் நலனில் பணியாற்றுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுவதாக பொன்னி மெடிக்கல் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் அரவிந்த சுப்பிரமணியம் தெரிவித்தார்.