சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா

சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா கொண்டாடப்பட்டது;

Update: 2025-09-06 14:48 GMT
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா மாவட்ட S.P.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, மேலும் கலை நிகழ்ச்சிகளும், காவலர் தின உறுதிமொழிகளும், போட்டிகளும் நடைபெற்றன. மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த ADSP, DSP, ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட S.P.கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் ஆயுதப்படை காவலர்களின் ஆயுத தளவாடங்கள் பள்ளி மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அவற்றின் செயல் திறன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Similar News