அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி
ரெட்டியார்சத்திரம் அருகே எலக்ட்ரிக் பைக் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி;
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கதிர் நரசிங்க பெருமாள் கோவில் அருகே எலக்ட்ரிக் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் எலக்ட்ரிக் பைக்கில் வந்த தாடிக்கொம்புவை சேர்ந்த பெருமாள் மகன் திருமுருகன்(32) சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் நயினார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீசார் தகவல் கூற மறுப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.