வேலூரில் அஞ்சல் குறை தீர்வு கூட்டம்!
வேலூர் கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்வு நாள் கூட்டம், வரும் 18-ம் தேதி வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது.;
வேலூர் கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்வு நாள் கூட்டம், வரும் 18-ம் தேதி வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் சேவை பெறும் வாடிக்கையாளர்கள், தங்கள் குறைகளை இந்தக் கூட்டத்தில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். குறைகள் குறித்த மனுக்களை வரும் 10-ம் தேதிக்குள், 'அஞ்சலக கண்காணிப்பாளர், வேலூர்-1 என்ற முகவரிக்கு எழுதி அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.