குறுங்காடு அமைக்கும் பணி துவக்கம்!
கொண்டசமுத்திரம் ஊராட்சி, காளியம்மன் பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து குறுங்காடு அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, காளியம்மன் பட்டி பகுதியில், 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து குறுங்காடு அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இன்று முதல் கட்டமாக, 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி நட்டு வைத்தார். இதில், வட்டாட்சியர் பழனி, சமூக ஆர்வலர்கள் தினேஷ், சரவணன், ஸ்ரீகாந்த், ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.