வாணியம்பாடி அருகே குடிகாரர்கள் இடையே ஏற்பட்ட தகராறை விலக்க சென்றவருக்கு கத்தி குத்து.
வாணியம்பாடி அருகே குடிகாரர்கள் இடையே ஏற்பட்ட தகராறை விலக்க சென்றவருக்கு கத்தி குத்து.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குடிகாரர்கள் இடையே ஏற்பட்ட தகராறை விலக்க சென்றவருக்கு கத்தி குத்து. படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி இம்ரான் பாஷா இவரது மாமாவான சித்திபா என்பவர் ஜபராபாத் பகுதியை சார்ந்த ஷமி ,சனாஉள்ளா, அக்பர், ஆகியோருடன் நேற்று இரவு இம்ரான் பாஷா வீட்டின் அருகே அமர்ந்து குடித்துள்ளனர் இப்பொழுது குடிபோதையில் இருந்த நான்கு நபர்களில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது அப்பொழுது சமி, சனா உல்லா, அக்பர் உள்ளிட்ட மூவரும் சித்திபாவை தாக்கியுள்ளனர். இதில் சித்திபா வழி தாங்காமல் சத்தம் போட்டு கதறி உள்ளார் அப்போது அங்கு வந்த அவரது உறவினர் இம்ரான் பாஷா இதற்காக தனது மாமாவை தாக்குகிறீர்கள் என சண்டையை தடுத்துள்ளார் இதில் ஆத்திரமடைந்த சமி, சனாவுல்லா, அக்பர் இவர்கள் மூவரும் இம்ரான் பாஷாவை கடுமையாக தாக்கியுள்ளனர் இப்பொழுது இவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இம்ரான் பாஷா வயிற்றுப் பகுதிகளில் குத்தியுள்ளார் இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விற்கப்பட்டுள்ள இம்ரான் பாஷா வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் அவர் உடல்நிலை கவலைக்கிடமான உள்ளது எனக் கூறி மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் தகராறு ஈடுபட்டவர்களை விலக்க சென்ற கூலித் தொழிலாளிக்கு கத்திக்குத்தி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.