சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் இன்று மாலை நடை அடைப்பு 

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கேயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் இன்று மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-07 10:37 GMT
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கேயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் இன்று மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் நிர்வாகத் தரப்பில் கூறியுள்ளதாவது: சந்திர கிரகண நிகழ்ச்சி ஏற்படுவதையடுத்து, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடக்கக் கூடிய சாயரட்சை பூஜை அன்று மாலை 4 மணியளவிலும், அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை மாலை 6 மணிக்குள் நடைபெற்று, பின்னர் மாலை 6.15 மணியளவில் நடை சாத்தப்படும். மேலும், அன்று தங்கரத உலா நடைபெறாது.  திங்கள்கிழமை காலை (செப்.8) வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News