முன்னாள் அமைச்சர் என்று சொல்ல மனம் வரல ....
குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி குதிரை ரேக்ளா போட்டிகள் நடந்தது. இதில்முன்னாள் அமைச்சர் என்று சொல்ல மனம் வரல ....;
குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி குதிரை ரேக்ளா போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குதிரைகள், ஜாக்கிகள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பம்கேற்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர், மைக்கில் கூறிக்கொண்டிருந்தார். நிரந்தர எம்.எல்.ஏ, , எங்கள் வீட்டு பிள்ளை, என தங்கமணியை புகழ்ந்து கொண்டிருந்தார். தங்கமணியை முன்னாள் அமைச்சர் என்று சொல்ல மனசு வரல.. அதனால் அமைச்சர் தங்கமணி என்று சொல்கிறேன் என்று பலமுறை கூறிக்கொண்டிருந்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி மேற்படி நிகழ்சிக்கு வந்து, போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போதும் அந்த நபர் எங்கள் அமைச்சர் தங்கமணியை, முன்னாள் அமைச்சர் என்று சொல்ல மனசு வரல, அதனால் அமைச்சர் தங்கமணி என்று சொல்கிறேன் என, தங்கமணி இருக்கும் போது கூட கூறினார். இதனை பல்வேறு ,மாவட்டங்களிலிருந்து வந்த குதிரை உரிமையாளர்கள், ஜாக்கிகள் , முன்னாள் அமைச்சர் மீது வைத்திருந்த பாசத்தை எண்ணி வியந்தனர்.