ரேணுகாதேவி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா!
ரேணுகா தேவி ஆலயத்தில் உள்ள அங்காளம்மனுக்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் பகுதியில் அமைந்துள்ள ரேணுகா தேவி ஆலயத்தில் உள்ள அங்காளம்மனுக்கு இன்று (செப்.07) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுரத்தில் கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.