தாராபுரம்-பழனி இடையே சாலையின் தரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
தாராபுரம்-பழனி இடையே சாலையின் தரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள். விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை;
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது. அந்த வகையில், பழனி-தாராபுரம் சாலையில் 13 கி.மீ. இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளின் தரம் குறித்து திருப்பூர் தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.