நடுரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பெரிய பள்ளம்
திண்டுக்கல்லில் பாதுகாப்பு வசதி இன்றி நடுரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பெரிய பள்ளம் தோண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார்;
திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகில் உள்ள தார் சாலையில் எந்த ஒரு அறிவிப்பு பலகை இன்றியும்,எந்த விதமான பாதுகாப்பு வசதி இன்றியும் நடுரோட்டில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எந்த வித பாதுகாப்பு வசதியோ, மின்விளக்கு வசதியோ இல்லாமல் இருந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டி(வயது 21) என்பவர் மோட்டார் சைக்கிளில் பள்ளத்தில் விழுந்தார். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர்,உதவி பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.