அடையாளம் தெரியாத வாகனம் மோதி நவீன விசைத்தறி டெக்னிசியன் பலி

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விசைத்தறி டெக்னிசியன் பலியானார்.;

Update: 2025-09-08 13:47 GMT
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வசிப்பவர் சுரேஷ்குமார், 38. இப்ர நவீன விசைத்தறி டெக்னிசியன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 04:30 மணியளவில் குமாரபாளையம் அருகே சாணார்பாளையம் பகுதியில் தனது டி.வி.எஸ். போனிக்ஸ் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சாலையில் இறந்து கிடந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இவரது உடலை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த இவரது உறவினர் சிவகுமார், 39, குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார், இந்த புகார் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் , விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News