ஏர்போர்ட் மூர்த்தி கைது: திமுக அரசு மீது அண்ணாமலை சரமாரி தாக்கு

கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார் என்று ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-09 05:58 GMT
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல் துறை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட, மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

Similar News