கறம்பக்குடி செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை, இவர் அப்பகுதியில் தானியக்கடை கடை நடத்தி வருகிறார். (செப்.8) காலை கடையை திறக்க வரும்பொழுது பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கல்லாவில் இருந்த 35,000 பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகார் பேரில் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.