பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மாவூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்;
திருவாரூர் அடுத்த மாவூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று அவரது வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்ற வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதனை அந்தப் பெண் தட்டி கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக குருமூர்த்தி மிரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது இது குறித்து பாதிக்கப்பட்ட பின் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு பதிவு செய்யப்பட்டு குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.