காஞ்சி முழுதும் சளி, இருமலுடன் பரவது.. மர்ம காய்ச்சல்
காஞ்சி முழுதும் சளி, இருமலுடன் பரவது.. மர்ம காய்ச்சல் மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்;
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சரியாக ஒரு நாளைக்கு 3,000 -- 3,500 பேர் புறநோயாளிகளிகாக சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நாட்களாக புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 4,500 பேர் வரை வந்து செல்கின்றனர். இதில், 50 சதவீதத்தினருக்கு மேல், சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் வழக்கமாக வரும் எனவும், மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால், சரியாகும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பலருக்கு காய்ச்சல், சளி என்ற பிரச்னை பரவலாக காணப்படுவதால், வைரஸ் பரவல் பற்றி ஒருவித அச்ச உணர்வு பலருக்கும் ஏற்பட்டள்ளது. தமிழகம் முழுதும் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில், குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என, உறுதி செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.