பேரூந்து மீது டூவீலருடன் மோதிய நபர் பலி
மதுரை அலங்காநல்லூர் அருகே பேருந்து மீது டூவீலருடன் மோதிய நபர் பலியானார்.;
திண்டுக்கல் மாவட்டம் கொட்டாம்பட்டி பிள்ளை யார் நத்தத்தை சேர்ந்தவர் அழகர் மகன் ராமச்சந்திரன் (39) என்பவர் அலங்காநல் லூர் ஊமச்சிகுளம் ரோடடில் குடிபோதையில் நேற்று முன்தினம் (செப்.7) இரவு இரு சக்கர வாகனத்தை அலங்காநல்லூர் ஊமச்சிகுளம் சாலையில் திலகம் மருத்துவமனை அருகே ஓட்டி வந்த போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் மீது மோதி கீழே விழுந்ததில் பலமாக அடிபட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.8) மதியம் உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல் லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.