கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அவனியாபுரத்தில் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முத்துவின் மகன் கார்த்திக் (24) என்பவர் கார் டிரைவராக உள்ளார் . இவர் பெண் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை பெண் கேட்கச் சொல்லி தன் தாயாரிடம் கூறியுள்ளார்.அதற்கு தாயார் எந்த பதிலும் சொல்லாமல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.