ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-09-10 03:31 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம், கடம்பூர் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.6.77 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சிறுபாலம், மேட்டுத்தெருவில் ரூ.3.88 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தானிய உலர் களம், கனவு இல்ல திட்டத்தின்கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடு மற்றும் ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Similar News